எஸ்.டி.பி.ஐ மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது தலைவர் பிலால் தீன் தலைமையில் பொதுச்செயலாளர் ஜியாவுதீன் வரவேற்றார் செயற்குழு உறுப்பினர்கள் சிக்கந்தர், செந்தில் குமார், அமைப்பு பொதுச்செயலாளர் பகுர்தீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இறுதியாக செயற்குழு உறுப்பினர் இம்தியாஸ் அஹமது நன்றியுரை நிகழ்த்தினார்..கூட்டத்தில் வருகின்ற ஒரு வருடத்திற்கான கட்சியின் வளர்ச்சி சம்பந்தமாக செயல்பாடுகள் குறித்தும். விவாதிக்கபட்டன..மதுரை நத்தம் இடையே நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது கடந்த ஆண்டு இந்த பறக்கும் பாலப்பணியின் போது விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா் இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திருப்பாலை பகுதியில் பாலப் பணியின்போது, ஞாயிற்றுக்கிழமை திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. கட்டுமானத்தில் இருந்த கற்கள் பெயா்ந்து விழுந்தன. இதில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவரும் காயம் அடைந்தனர் அப்பகுதியில் பயனிக்கும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு வருகிறது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக்கொள்ளபட்டன

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!