திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருக்கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில், திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்கோயிலில் நேற்று இரவு சுற்றுச்சுவர் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கே இருந்த உண்டியல் மற்றும் பீரோ ஆகியவற்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் உண்டியலில் இருந்த ரூபாய் 10 ஆயிரம் வரையிலான பணம், மற்றும் பீரோவில் இருந்த திருக்கோவில் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக மேலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல்துறையினர் கொள்ளை தொடர்பாக தடங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுதொடர்பாக திருக்கோயில் நிர்வாக டிரஸ்டி முருகன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!