மதுரைக்கு வந்த சோதனை! மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 6 மாதமாக அகற்றப்படாத கழிவுகள் பா.ஜ.க மாவட்ட தலைவர் ஆய்வு.

 மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பல மாதமாக கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதை மதுரை மாவட்ட பா.ஜ.க’வினர் நேரில் சென்று பார்வையிட்டு வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். அதன் பின்னர் பா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அதன் போது,மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மனும், மதுரை மல்லியும்தான். ‘மதுரை மல்லியின் மணம் மதுரையில் மட்டும் மணக்கவில்லை, உலக அளவில் மணம் வீசிக்கொண்டுள்ளது. சங்க காலம் முதல் உலக பிரசித்தி பெற்ற மதுரையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ‘பூ மார்கெட்’ நிலைமை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது .6 மாதமாக அகற்றப்படாத கழிவுகள் :மாட்டுத்தாவணியில் உள்ள பூ மார்க்கெட்டின் கழிவுகள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக அகற்றப்படாமல் ஒரே இடத்தில் சேமிக்கப்பட்டுள்ளது . அதனால் மிக மோசமான சுகாதார கேடு அமைய காரணமாய் இருக்கிறது. மருத்துவ ரீதியாக துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை மூலமாய் அங்கே தினமும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய் பரவ அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. அது போக கழிவுகள் மிகுதியாக உள்ள இடத்தில் பாம்பு தொல்லை இருப்பதால் உயிர் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.கட்டணம் செலுத்தியும் நடவடிக்கை இல்லை:கழிவுகளை அகற்ற வியாபாரிகள் மாதம் ரூபாய் 2 லட்சம் வரை கட்டணம் செலுத்தியும், பலமுறை புகார் அளித்தும் மதுரை மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் சிறிதும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சர்யப்படவைக்கிறது .போக்குவரத்து நெரிசல்:பூ மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் அனைவரும் வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். அதனால் மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் மிக அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சுகாதாரமற்ற கழிப்பிட வசதி:மேலும், பூ மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து சென்றாலும் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. இருக்கும் கழிவறைகளும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.மதுரை சுகாதார ஆய்வாளர்கள் வீடு தோறும் ஆய்வு செய்து சுகாதார முறைகேடு என்று கூறி அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பூ மார்க்கெட்டினை முறையாக பராமரிக்காமல் இருப்பதற்கு யார் அபராதம் விதிக்கப்போவது?இவ்வாறு, மதுரை மாநகர் மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர்.சரவணன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!