15 வயது சிறுமி பாலியல் தொல்லையில் 5 மாத கர்ப்பம்: இரண்டு முதியவர் மீது அனைத்து மகளிர் காவல் வழக்குப் பதிவு. ஒருவர் கைது.

மதுரை அவனியாபுரத்தில் 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய இரண்டு முதியோர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 15 வயது சிறுமி அருகில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுமி வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்தில் சிறுமியின் வீட்டு அருகே உள்ள பாலமுருகன் (எ) முருகேசன் என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சிறுமி குடியிருக்கும் வீட்டிற்கு பின்புறம் உள்ள ரமேஷ் என்பவர் இதனை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பாலமுருகனை கைது செய்து தலைமறைவாக இருக்கும் ரமேசை தேடி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!