மதுரையில் பொது பாதையை மறைத்து இரும்பு கேட் அமைத்த விவகாரம் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்.

மதுரை மாவட்டம் விரகனூர் அருகே பாலாஜி நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் பொதுப் பாதையை மறைத்து இரும்பு கேட் அமைக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் கடந்து செல்வதில் சிரமம் இருந்தாக புகார் எழுந்தது இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அதிகாரி ராமர், ஊராட்சி மன்ற தலைவர் அடங்கிய குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமைக்கப்பட்ட 10 அடி உயரம் கொண்ட இரும்பு கேட்டை அப்புறப்படுத்தினார், மேலும் இனிவரும் காலங்களில் இரும்பு கேட் அமைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என வீட்டின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!