சோழவந்தான் அருகே கஞ்சா மற்றும் மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து அராஜகம் டிரைவரை தாக்க முயனறதால். பரபரப்பு .

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கருப்பட்டி பகுதியில் அதிக அளவு இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்.நேற்று இரவு.அரசு பேருந்தை டூவீலர் கொண்டு மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை.தகாத வார்த்தைகளால் திட்டி மது பாட்டிலை உடைத்து குத்த முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர் கூறியதாவதுகருப்பட்டி இரும்பாடி பகுதியில் அதிக அளவில் இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்றனர் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கூடம் செல்ல பயப்படுகின்றனர்இதனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் இந்த வழித்தடத்தில்.பணிபுரிய பயப்படுகின்றனர்கஞ்சா மற்றும்.மது போதையில் உள்ளவர்கள் அடிக்கடி ரோட்டின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி வருவதாகவும் இதனால் உயிர் பயம் ஏற்படுவதாகும் கூறுகின்றனர்.இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லைஎனவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு காலை மாலை என இருவேளைகளிலும் நிரந்தரமாக காவல் பணியில் ஆட்களை நியமிக்க வேண்டும்மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்இளைஞர்களை நல்வழிப்படுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!