மதுரை ஆதினதிற்கும் ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாத்துகாப்பு கேட்டு வக்கீல்கள் மனு.

மதுரை வக்கீல் முத்துக்குமார் தலைமையில் வக்கீல்கள் ராஜேந்திரன், நீலமேகம், கௌரிசங்கர், அமிழ்தன்,நாகராஜ் பாண்டிவேல்ராஜன், முகமது ரஸ்வி ராஜு ஆகியோர் மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் மதுரை ஆதினமடம் 293 ஆண்டுகாலம் பாரம்பாரியம் மிக்கது. திருஞான சம்பந்தரால் தோற்று விக்கப் பட்டது. சமீபத்தில் அவரது உயிருக்கும் ஆதின மடத்திற்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்து விரோத சக்திகள் எந்த நேரமும் மதுரை ஆதினகர்த்தா . மீதும் மடத்தின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் மத மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இது சம்பந்தமாக இன்று காலையில் ஆதினம் அவர்களை நேரில் சந்தித்து நிலவரம் அறிந்தோம். அவரும் உரிய பாதுகாப்பு கேட்டு பேட்டி அளித்துள்ளார். ஆகவே மதுரை ஆதினத்திற்கும், ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளித்து பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்து மதத்தை பாதுகாக்க பொதுநலன் கருதி கேட்டு கொள்கிறேன என்று தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!