மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அதிகரிக்க விருதுநகர் M.P. கோரிக்கை.

மதுரை விமான நிலையத்திற்கு 24 மணி நேரம் சேவைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சிஐஎஸ்எப்) வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று ஒன்றிய உள்துறை அமைச்சர்.அமித்ஷாவிற்கு கோரிக்கை.மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரம் சேவை கிடைத்தால்தான் சர்வதேச விமான நிலையமாகும். சர்வதேச விமானங்களும் இயக்க முடியும். இந்தநிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்களை (CISF) குறைந்திருப்பதன் விளைவாக மதுரை விமான நிலையம் இரவு 10 மணிக்கு மேல் இயங்குவதில்லை.24 மணி நேரத்தில் 3 (Shift) பணி கால நேரத்தை 2 (Shift) பணி கால நேரமாக குறைத்து நடைமுறைபடுத்தியிருப்பதால் வீரர்கள் இரவு 10 மணிவரை மட்டுமே பணியில் இருக்க முடியும்.இந்தக் குறையை தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சர்அமித்ஷா அவர்கள் CISF மத்திய தொழில் பாதுகாப்பு படை பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (பொறுப்பு தெலுங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்கள்.மேலும் 2013 இல் மதுரை விமானநிலையம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் தான் இன்று வரை கடந்த 8 ஆண்டுகளாக உள்ளது என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.விரைவில் சர்வதேச விமான சேவை துவங்குமானால் தென்தமிழக வளர்ச்சிக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதத்தில் கூறியுள்ளார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!