கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மாணவி நதியா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துமீனாள் ,கருப்பையா ,முத்துலெட்சுமி,ஸ்ரீதர் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிறைவாக மாணவி கீர்த்தியா நன்றி கூறினார். நிகழ்வில் பரத நாட்டியம், மழலையின் ஆங்கில உரை,மழலைகளின் குழு நடனம், தமிழ் நாடகம் ( மழலைகள் பங்கேற்ற நாடகம் ) ,உழைப்பை வலியுறுத்தும் கோலாட்டம் ,மொபைல் போன் வளர்ச்சியை,பாதிப்பை விளக்கம் ஆங்கில நாடகம் , கருப்பர் பாட்டுக்கான கலக்கல் நடனம்,கண்ணை கவரும் மழலைகளின் குழு நடனம்,நல்ல சேதி சொல்லி வரும் மாணவர்களின் வில்லுப்பாட்டு, மனமும்,உடலும் பலமானதாக ,உறுதியானதாக இருக்க வேண்டி யோகா செய்து,விளக்கமும் கொடுத்த நிகழ்வு என அருமையாக ஒரு மணி நேரம் மாணவர்கள் பார்ப்பவர்களை அசர வைத்தனர்.

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!