பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பயத்தால் அவனியாபுரத்தில் திருமங்கலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் தீக்குளித்து இறப்பு.

மதுரை திருமங்கலம் அருகே புள்ளமுத்தூர் கிராமத்தில் உள்ள கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த பழனிபாபு-உஷாராணி தம்பதியரின் மகன் 17 வயது (சஞ்சய்)., இவர் திருமங்கலம் பி.கே.என் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவரும் மாணவன் அடிக்கடி அனைத்து பாடங்களிலும் தோல்வியைத் தழுவியதால் தாயார் உஷாராணி தனது அண்ணன் ராஜபாண்டி வசித்துவரும் அவனியாபுரம் பகுதியிலிருந்து தங்கிபடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.இதனால் தாய்மாமன் ராஜபாண்டி என்பவரது வீட்டிலிருந்து தினமும் திருமங்கலத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்த மாணவன்., பொதுதேர்வு எழுதுவதில் பயத்துடன் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறதுத. இந்த நிலையில் இன்று முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பொதுத் தேர்வு தொடங்கப்பட்டு நடைபெற்ற நிலையில். இன்று தேர்வு பயம் காரணமாகவும் தான் பொதுத்தேர்வில் தோல்வி அடைவேன் என்று எண்ணி., அதிகாலை 5 மணியளவில் தனது மாமா ராஜபாண்டி இருசக்கர வாகனத்திற்கு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வீட்டில் அனைவரும் தூங்கி இருந்த நேரத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிய சிறுவன் தீவைத்துகொண்டார்.பள்ளி மாணவன் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய்மாமன் ராஜபாண்டி ஓடி வந்து பார்த்த போது தீயில் எறிந்த நிலையில் பார்த்தவுடன் சிறுவனை காப்பாற்ற முயன்று தாய்மாமனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் உடனடியாக தீயை அணைத்து தீக்காயம் அடைந்த சிறுவன் மற்றும் அவரது மாமா ராஜபாண்டி ஆகியோர் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்., தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பிளஸ் டூ பொது தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவேன் என எண்ணி உடலில் பெட்ரோல் ஊற்றி தன்னைத் தானே தீயிட்டு எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தமா 104 தொடர்பு கொள்ளுங்கள் உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!