சோதனை ஓட்ட ரயில் செல்லும் பாதையில் மாடு குறுக்கே வந்தது மெதுவாகச் சென்றதால் ரயில் எஞ்சினை நிறுத்தி கீழே இறங்கி மாட்டை விரட்டிய ரயில் இன்ஜின் ஓட்டுநர் .

 மதுரை போடி அகல ரயில் பாதை பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டமானது அவ்வப்போது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இன்று காலை பழங்காநத்தம் மாடக்குளம் இணைப்பு ரயில்வே கேட் அருகே காலை 9 மதுரையில் இருந்து தேனி நோக்கி நோக்கி மணி அளவில் சோதனை ஓட்ட ரயில் இன்ஜின் வருவதற்காக இருபுறமும் ரயில்வே கேட் அடக்கப்பட்டது ரயில்வே கேட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பசுமாடு ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது இதனை சற்று தூரத்திலேயே கவனித்த ரயில் ஓட்டுனர் வேகத்தை மெதுவாகத் குறைத்து ஹாரன் சத்தம் கொடுத்தபடியே சென்றுகொண்டிருந்தார் எனினும் பசுமாடு தண்டவாளத்தில் நடுவழியில் நின்று கொண்டிருந்தது உடனடியாக அவர் இன்ஜினை அணைத்து கீழே இறங்கி பசுமாட்டை விரட்டிவிட்டார் ஓட்டுநரை சாதுரியத்தால் பசுமாடு ரயிலில் இருந்து தப்பியது சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இனிவரும் காலங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் இதனால் கால்நடைகளை ரயில் தண்டவாளங்களில் உலா வருவதை தடுக்க ஆடு மாடு மற்றும் கால்நடை உரிமையாளர்கள் ரயில் தண்டவாளங்களில் வருவதை தடுக்க வேண்டும் மேலும் இருபுறமும் கவனித்து ரயில் வருகிறதா என மனிதர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் தண்டவாளத்தை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!