கிராம சபை கூட்டம் முறையாக நடத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை கிராமத்தில் நேற்று தலைவர் பாப்பாத்தி தலைமையில் கிராம சபை கூட்டத்திற்கு ஊரட்சிக்கு உட்பட்ட கிழானேரி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு முறையாக கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்காமல் 100 நாள் வேலைக்கு அட்டை வழஙகுவதாக கூறி பெண்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துவதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தர மறுப்பதாகவும், இந்த கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள வில்லை எனவும் மேலும் முறையாக கூட்டத்தை நடத்தி வரவு செலவுகளை தாக்கல் செய்யக்கோரி வார்டு உறுப்பினர் முகுந்தன் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . இதற்கு முறையாக ஊராட்சி மன்ற தலைவர் விளக்கம் கொடுக்காததால் இதனை கண்டித்து வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் தேனி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்ககு வந்த போலீசார் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!