பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தகப்  புதையல் என்ற தலைப்பில் நூலக சிறப்பு மின்னிதழ் வெளியீட்டு விழா. 

செங்கம் கல்வி மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் “புத்தகப்  புதையல்” என்ற தலைப்பில் நூலக சிறப்பு மின்னிதழ் வெளியீட்டு விழா திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. செங்கம் கல்வி மாவட்டத்தின் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, பள்ளி  மாணவர்கள் அமைத்த ஆயிரக்கணக்கான இல்ல நூலகங்கள் குறித்தும் பள்ளி  நூலகங்களை உயிரூட்டி அதனால் ஏற்பட்ட மாணவர் நலன் சார்ந்தும் சாதனை பதிவுகளாக இதில் கட்டுரைகள் இடம்பெற்றன. .  சிறப்புமிக்க இம்மின்னிதழை முதல் பிரதியைத் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி வெளியிட மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் திரு வை.குமார் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் முனைவர் மு அரவிந்தன் முன்னிலை வகிக்க போளூர், ஆரணி, செய்யாறு, மாவட்ட கல்வி அலுவலர்கள் அரசு அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் . புத்தகப் புதையல் மின் இதழை குறித்துமாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் திரு வை.குமார் பாராட்டினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!