வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி சார்பில் 10 நாள் நாட்டுநலப்பணிதிட்ட சிறப்பு முகாம் அருகில் உள்ள இடையன்சாத்து கிராமத்தில் நடைபெற்றது.மாணவ-மாணவிகள் கிராம பகுதியில் சுற்றுச்சூழல், கொரோனா விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு, யோகா என பல்வேறு விழிப்புணர்வு பேரணி, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.கிராம பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பள்ளி கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது.நிறைவுநாள் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருளரசு தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் காந்த ஷோபா வரவேற்றார். திட்ட அலுவலர் பிரவீன்ராஜ் திட்ட அறிக்கையை வாசித்தார். துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, பேராசிரியர்கள் ரஹீலாபேகம், உதவி பேராசிரியர்கள் அன்புக்கரசி, பத்பநாபன், கலைவாசன், சுப்பிரமணி, பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாட்டுநலப்பணிதிட்ட மாணவர் கிருபானந்தன் நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.