தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்..இந்நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்தியது, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை குமார் ராஜா, உதவி பங்குத்தந்தை கிங்க்ஸ்டன், ஜேசுராஜா, அருட் சகோ மைக்கேல் ஆகியோர் உடனிருந்தனர்.
கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களது வேண்டு தல்களை நிறைவேற்றும் வகையில் பால், பழம் உள்ளிட்ட வைகளை கொடிமரத்தில் படைத்தனர். பேராலயத்தி ருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியினை முன்னிட்டு சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன மேலும் வ.உ.சிதம்பரனார் பழைய துறைமுகத்தில் உள்ள இழுவை கப்பல்கள் மூலம் கொடியெற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு சங்கொலி எழுப்பப்பட்டது.கொடியே ற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை 6 மணியளவில் தூத்துக்குடி திருச்சிலுவை சிற்றாலயத்திலிருந்து பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் மாதாவின் புகழ் கீதம் பாடி கொடி பவனி நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் கலந்து கொண்டனர்.மாதா திரு உருவம் பொறித்த பொன் நிற கொடியையும், எளியோருக்கும் திருவழிபாட்டிற்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய காணிக்கை பொருட்களை பனிமய மாதா ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக மதியம் 12 மணியளவில் முதன்மை குரு ரோலிங்டன் தலைமையி்ல் பனிமய மாதாவுக்கு பொன் மகுடம் சூட்டப்படுகிறது.
இந்த கொடியேற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர், மேலும் குருக்கள், துறவியர், அருட்ச கோதர, சகோதரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.திரு விழாவுக்கான பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போலீசார் S.P. அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி நகர D.S.P. பிரகாஷ் தலைமையில் ஈடுபடுத்தப்பட்டனர், திருவிழாவின் இறுதி நாளான ஆக.5ம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் பெருவிழாவில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





You must be logged in to post a comment.