பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாதாளச் சாக்கடை பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சிநிர்வாகம். 3பலி.

மதுரை மாநகராட்சி 70வது வார்டு நேரு நகரில் நேதாஜி மெயின் ரோடு உள்ள மாநகராட்சி கழிவு நீர் வெளியற்றும் தொட்டியில் (பம்மிங் ஸ்டேஷன்) உள்ள மின் மோட்டார் பழுதாகி கழிவு நீர் தேக்கமடைந்துள்ளது. இந்நிலையில் மின் மோட்டாரை வெளியே எடுத்து கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஏலக்ட்ரீசியன் கார்த்திக், சரவணன் மற்றும் தொழிலாளர்கள் லட்சுமணன், சிவகுமார் ஆகிய 4 பேர் ஈடுபட்டுள்ளனர். இரவு எட்டு முப்பது மணி அளவில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவு நீர் தொட்டியில் இறங்கிய சரவணன் விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியாக சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் குதித்துள்ளனர்.உள்ளே அலறல் சப்தம் கேட்டதுடன் வெளியே நின்ற கார்த்திக் கொடுத்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு சிவகுமாரை மீட்டு இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் முன்னதாக அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் லட்சுமணனை சடலமாக மீட்டனர். சரவணன் உடல் கழிவுநீர் தொட்டியின் அடிப்பகுதிக்குள் சென்றுவிட்டதால் மாநகராட்சி கழிவு நீர் எடுக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணி போராடி கழிவு நீரை அகற்றிய பின்னர் சரவணனின் உடல் மீட்கப்பட்டது.பேட்டி : மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்விபத்து குறித்து உரிய விசாரணை நடத்திய பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விசாரணைக்கு பின்பாக விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!