அலங்காநல்லூர் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம்.அலங்காநல்லூர் அருகே பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கான அரசு பேருந்துகள் தாமதமாக வருவதை கண்டித்து கிராம பொதுமக்கள் பஸ் மறியல்மதுரை மாவட்டம், , அலங்காநல்லூர் அருகேபெரிய இலந்தை குளத்திலிருந்து. அலங்காநல்லூர் செல்லும் மாணவ மாணவிகளுக்காகமதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பெரிய இலந்தகுளத்திற்கு தினசரி காலை எட்டு முப்பது மணிக்கு அரசு பேருந்து வந்து அலங்காநல்லூருக்கு மாணவ மாணவிகளைஏற்றி செல்வது வழக்கம்கடந்த சில தினங்களாக காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வராததால் பெரிய இலந்தகுளம் கவுண்டம்பட்டி குட்டி மேய்க்கிபட்டி கோவிலூர் போன்ற அலங்காநல்லூர் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து அலங்காநல்லூர் பள்ளிக்கு வருகை தரும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வராததால் பள்ளிகளுக்கு தாமதமாக வரும் மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் வெளியில் நிறுத்தி வைப்பதாகவும் இதனால் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்து வந்தனர்இதனையடுத்து பெரிய இலந்தை குளம் கிராம பொது மக்கள் ஒன்று சேர்ந்து பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்மாலை பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் இந்த பகுதி ஒரே பரபரப்பாக காணப்பட்டதுதகவல் கிடைத்து அங்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் அலங்காநல்லூர் காவல்துறையை சேர்ந்தவர்கள் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்நாளை முதல் உரிய நேரத்திற்கு அரசு பேருந்தை இயக்குவதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!