மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வார்டு எண்:3 மேலத்தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக ஆபத்தான மின்கம்பத்தையும் இடையூறாக இருக்கும் மின்கம்பத்தை மாற்ற மின்சார வாரியத்தில் மனு கொடுத்தோம். மின்சார வாரியத்தில் மனு ஊராட்சி மன்றத்தில் தான் கொடுக்க வேண்டும் என்று மின்சார வாரியத்தில் கூறியதால் ஊராட்சி மன்றத்தில் மனு கொடுத்தோம். ஊராட்சி மன்றமும் தாமதம் ஆக்கியதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுத்தோம் பிறகு ஊராட்சி மன்றத்தில் இருந்து மின் வாரியத்திற்கு பணம் செலுத்தினார்கள்…. பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் மின்சார வாரியத்தில் இருந்து எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள் எந்த நேரத்திலும் மின்கம்பம் கீழே விழும் அபாயத்தில் உள்ளது எனவும் பலமுறை மின் வயர்கள் கீழே அறுந்து விழுந்து உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் இங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவையான கழிவுநீர் பாதை வசதி கழிவுநீரை கைகளில் அள்ள வேண்டிய அவல நிலையில் உள்ளது, சாலை வசதி, குடிநீர் வசதி செய்ய முடியாமல் இங்கு வாழும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.. என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர் மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகளும் உயிர்பலி ஆகும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்..


You must be logged in to post a comment.