கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு.

மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 5 தேதி மீனாட்சிஅம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. இன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் 3000க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்,

கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் என இருவர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்,

உயிரிழந்தவர்கள் உடலானது மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்களின் விவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் 9498042434 இன்றைய தகவல் கொடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!