அலங்காநல்லூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் வாழை மரங்கள் சேதம். வேதனையடைந்த விவசாயிகள்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கோணப்பட்டி, எர்ரம்பட்டி, கொண்டையம்பட்டி, வைகாசிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து, பலத்த காற்று வீசியதால் பலன் தரக்கூடிய நிலையில் உள்ள வாழை மரங்கள் ஒடிந்தும், 10 லட்சம் மதிப்புள்ள வாழைக் காய்கள் ( வாழைத்தார்) சேதமடைந்துள்ளது. இதனால் ,விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.மேலும், இது குறித்து வேளாண் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மூலம் முறையாக கணெக்கெடுத்து தமிழகஅரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!