கீழபனங்காடியில் காலில் ரத்தகாயங்களுடன் தூக்கிட்ட நிலையில் மாணவி மர்ம மரணம். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

மதுரை அலங்காநல்லூர் அருகே பேச்சிகுளம் ஊராட்சி வாகைகுளம் கண்மாய் பகுதியில் ஜெயபாண்டி என்பவர் வீடு கட்டி வருகிறார். இங்கு கட்டுமான பணிகள் நடந்து வரும்நிலையில், இங்குள்ள மாடிபகுதியில், சென்னை திருவான்மியூரை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார், சென்னை மாணவி இங்கு தனியாக வந்தாரா?, அவரை மர்ம நபர்கள் அழைத்து வந்தார்களா? வருவதற்கான காரணம் என்ன, இது கொலையா, தற்கொலையா, என தீவிர விசாணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!