காளவாசல் மிட்லண்ட் தியேட்டரில் சன் பிக்ஸர்ஸ் -ன் பீஸ்ட் படம் வெற்றியடைய ரசிகர்கள் அலகு குத்தி 108 தேங்காய் உடைத்து பாலபிஷேகம் செய்தனர்.

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மிட்லண்ட் தியேட்டரில் பீஸ்ட் திரைபடம் திரையிடப்பட்டுள்ளது. விஜய் மக்கள் மன்றம் சார்பில் அலகு குத்தி, தேங்காய் உடைத்து பாலபிஷேகம். செய்து குத்தாட்டம் போட்ட ரசிகர்கள்மதுரையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படம் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது .காளவாசல் பகுதியில் மிட்லண்ட் தியேட்டரில் பீஸ்ட் படம் திரையிடப்பட்டுள்ளது.விஜய் மக்கள் மன்ற ரசிகர்கள் காளவாசல் பகுதியில் இருந்து அலகு குத்தி ஊர்வலமாக வந்து தியேட்டரில் தேங்காய் உடைத்து பாலபிஷேகம் செய்தனர் . பெண் ரசிகைகள் குத்தாட்டத்துடன் ஊர் வலமாக வந்தது பார்ப்பவரைக் கவரும் விதமாக அமைந்தது.விஜய் மக்கள் மன்ற மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சதீஷ் கூறுகையில் எங்களுக்கு பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் இல்லை.ஒன்றரை வருடங்களுக்கு பின் தளபதி விஜயின் படம் சன் பிக்சர்ஸ் மூலமாக வெளிவந்துள்ளது பெரும் மகிழ்சியளிக்கிறது.கேஜிஎப் படம் பீஸ்ட் போட்டி என கூறப்படுவது தவறு.இந்த படம் கே எம் டி அதாவது கலாநிதி மாறன் தளபதி இணைந்து வழங்கிய இந்த படம் மிகவும் வெற்றிப்படமாக அமையும் என கூறினார்.விஜய் அவர்கள் நலம்பெற வேண்டியும் பீஸ்ட் படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டியும் அலகு குத்தி, 108 தேங்காய் உடைக்க உள்ளோம் என கூறினார்.

செய்தியாளர வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!