ஆறாவது விரல் எதுக்கு, ஆளுனர் எதற்கு நமக்கு. ஆறாவது விரலால் எந்த பிரயோஜனமும் இல்லை.-இயக்குநர்.நடிகர் போஸ் வெங்கட் பேட்டி.

மதுரையில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த திமுக தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான போஸ் வெங்கட் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு:டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அதுக்கு போராட்டம் செய்யாமல் சொத்து வரிக்கு போராடுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அந்த பிரச்சனை இல்லை. அதற்கு சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டிய தான் நமக்கு நல்ல முதல்வர் கிடைத்திருக்கிறார். பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது அது போல தமிழகத்தில் விலைவாசி பொருத்தவரை எந்த பிரச்சனையும் வராது.நீட் விவகாரத்தில் ஆளுநர் செயல்பாடு குறித்த கேள்விக்கு:ஆறாவது விரல் எதுக்கு, ஆளுனர் எதற்கு நமக்கு. ஆறாவது விரலால் எந்த பிரயோஜனமும் இல்லை.பெட்ரோல், டீசல் விலை குறைப்பதில் திமுக முயற்சி குறித்த கேள்விக்கு:தமிழக அரசு 3 ரூபாய் பெட்ரோலுக்கு குறைத்துள்ளது. மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். திமுக சார்பாக மத்தியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து தான் வருகிறார்கள். இந்திய அளவில் திமுக எம்பிக்கள் கொடுக்கும் அளவிற்கு அழுத்தம் வேறு யாரும் கொடுப்பதில்லை. ஆளுநரை வேண்டாம் என்கிற தைரியமும் தமிழக முதல்வருக்கும், தமிழக எம்பிகளுக்கு மட்டும்தான் உள்ளது. விலைவாசியை பொருத்த அளவில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது ஐந்து வருடத்திற்கு வரி உயர்வு அனைத்திலும் இருக்கும் அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் எப்படி இந்த அளவுக்கு அவருக்கு தைரியம் உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் கொடுத்த தைரியத்தில் ஆடுகிறார்கள். 2024இல் எல்லாம் மாறும் நம்புவோம்.உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு:உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது ஒரு தனிப்பட்ட நபரை பொருத்தது. திமுகவும் இருவருக்கும், அறிமுகம் இருந்திருக்கும், விஜய் மக்கள் இயக்கத்தினர் இருந்திருப்பார்கள் ஆனால் சாதி ரீதியாக அவர் அதிக ஓட்டுகளை வைத்திருக்கக்கூடிய ஒருவராக இருப்பார். அவருக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டிருக்கும் அதற்காக விஜய் மக்கள் இயக்கத்தை பயன்படுத்தியிருப்பாரே தவிர இது விஜய் மக்கள் இயக்கம் என்கிற தனிப்பட்ட இயக்கமோபெரிய அரசியல் கட்சியோ என வாக்குகள் இருந்திருக்காது தனிப்பட்ட நபர் சொந்த செல்வாக்கு அதை பயன்படுத்தியிருப்பார் அவ்ளோதான் என போஸ் வெங்கட் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!