சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கார் உரிமையாளர்.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது நவ்ஷத் அலி (65)., இவருக்கு சொந்தமான TN59-AP-7077 ஸ்கோடா பாபிய என்றரக என்ற கார் வைத்திருக்கிறார். தனது கார் ஏற்கனவே பழுது இருந்ததால் நேற்று முன்தினம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள ஸ்கோடா கார் நிறுவனத்தில் பழுதுபார்க்க கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று 3:30 மணி அளவில் தனது மனைவி ஷார்ஜாநராவுடன் வெள்ளக்கல் பகுதியில் பழுதுபார்க்க கொடுத்த கார் நிறுவனத்திற்கு சென்று காரை எடுத்து வந்து கொண்டிருந்தனர்.அதன்பின் டீசல் நிரப்புவதற்காக தெற்கு வாசல் வரை சென்ற அவர் அங்கு சிறிய வேலை நிமித்தமாக சென்று., மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார் அப்போது வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்துகொண்டிருந்தபோது மீனாட்சி நகர் பேருந்து நிறுத்தம் அருகே காரிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது சுதாரித்துக்கொண்ட முகமத் நவ்ஷாத் அலி மற்றும் அவரது மனைவி ஆகியோர் காரில் இருந்து லாவகமாக தப்பித்து வெளியே வந்தனர்.இதனைத் தொடர்ந்து., கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கிய., அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வேகமாக வந்து தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த காரை., தீயணைக்கும் உபகரணம் கொண்டு தற்காலிகமாக தீயை அணைத்தனர். அதன்பின் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். கார் தீப்பற்றி எரிந்த இடத்திற்கு அருகில் இந்தியன் கேஸ் நிறுவனம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வயதான தம்பதியினர் பழுது பார்த்து தனது காரில் வீட்டுக்கு செல்லும்பொழுது கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!