சித்திரை திருவிழாவினை முன்னிட்டு தினமும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி, பிரியாவிடை.

 மதுரை நகரில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு தினமும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி, பிரியாவிடை – சொக்கநாதர் நான்கு மாசி வீதிகளில் சுவாமிகள் நகர்வலம் வருகின்றனர்.மேலமாசி வீதியில் உள்ள முத்து விநாயகம் ஆச்சாரி வகையறா மண்டபத்தில் மாரிசெல்வம் சகோதரர்களால் தினமும் திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.கொரானா காலத்தினால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழாக்கள் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சித்திரை திருவிழா நடைபெறுவதால் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.இதனை முன்னிட்டு மேலமாசி வீதியில் உள்ள முத்துவிநாயகம் ஆசாரி மண்டபத்தில் அவர்களது வாரிசுகள் மாரிச்செல்வம் சகோதரர்கள் மண்டகப்படி உள்ளது இங்கு சாமி வரவேற்கும் விதமாக பொம்மைகளின் கையில் பூக்கூடையில் மலர்தூவிவரவேற்கும் விதமாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பத்து நாட்களும் காலை மாலை இருவேளையும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.விழாவில் முக்கிய நிகழ்வாக 14ம் தேதி திருக்கல்யாணம்15ம் தேதிதேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!