திருப்பரங்குன்றம் TPK சாலையில் 2 ஆட்டோக்கள் மோதி விபத்துக்குள்ளான CCTV காட்சி.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் அருகே செல்லும் TPK சாலையில் கடந்த 2ஆம் தேதி காலை 11.50AM மணி அளவில் முன்னால் சென்ற கேஸ் ஆட்டோ மீது., ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக பின்னால் வந்த ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் செல்லும் TPK சாலையில் இம்மாதம் இரண்டாம் தேதி காலை 11:50 மணி அளவில் கேஸ் ஆட்டோ ஓட்டுநர் ஆட்களை ஏற்றாமல் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். தனது ஆட்டோவில் ஏதோ பழுது ஏற்பட்டு இருப்பதை அறிந்த ஓட்டுனர் வாகனத்தை மெதுவாக ஓட்டி சென்று கொண்டிருந்த போது., அவருக்குப் பின்னால் மூன்று பயணிகளுடன் ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் முன்னால் சென்ற கேஸ் ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.இதில் 2 ஆட்டோக்களும் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது., மேலும் கேஸ் ஆட்டோவிலிருந்து கேஸ் ஆனது வெளியே கசிய தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு எரிவாயு கசிவதை நிறுத்தினர். இந்த விபத்தினால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணித்த மூன்று பேர் மற்றும் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.தற்போது இந்த விபத்து குறித்து எந்த ஒரு வழக்கும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பதியப்படவில்லை., இருப்பினும் தற்போது இந்த விபத்து நடந்தடது அருகில் இருந்த கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி யில் தெள்ளத் தெளிவாக பதிவாகி இருந்தது. தற்போது விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!