சுரங்க வழிப் பாதையில் சாலை சேதமடைந்து , பக்கவாட்டுச் சுவரின் கழிவுநீர் வெளியேறி, பாதை முழுவதும் பாசம் அடைந்து. நோய் பரவும் அபாயம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் ரயில்வே வழிப்பாதையின் அடித்தளத்தில் சுரங்க வழிப் பாதை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது . அன்று முதல் சுரங்க வழிப் பாதையில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கிய வண்ணமே இருந்து வருகிறது .இதுகுறித்து ரயில்வே நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுப்பதில்லை , இந்நிலையில் இந்த சுரங்கப் பாதை சேதமடைந்ததுடன், பக்கவாட்டுச் சுவரில் துவாரம் ஏற்பட்டு அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி , சுரங்க வழிப் பாதை முழுவதும் கழிவுநீர் தேக்கம் அடைந்து , துர்நாற்றம் வீசுவதுடன் பக்கவாட்டு சுவர் முழுவதும் பாசம் அடைந்து வழிப்பாதை முழுவதும், இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது .இதுகுறித்து அப்பகுதி வாசிகள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் அவ் வழிப் பாதை வழியாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்களும், பொறியியற் கல்லூரி மாணவ, மாணவியர்கள் செல்லும் பகுதியாகவும் , விமான நிலைய வழிப்பாதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!