பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அடிப்படை வசதி கோரி, உறுப்பினர்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி தேர்தலுக்குப்பின், முதன்முறையாக தலைவி ரேணுகாதேவி கோவிந்தராஜ் தலைமையில், கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் துணைத் துணைத் தலைவர் சாமிநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் ஷீலா பானு, இளநிலை உதவியாளர் ராசா,அபிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், 14 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 10-ஆவது வார்டு உறுப்பினர் சர்மிளா,தனது வார்டில் 16 மின் கம்பங்கள் தெரு விளக்கு எரியாமல் உள்ளது உடனடியாக சரி செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நான்கு இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும், முனியாண்டி கோவில் அருகே உள்ள கழிவுநீர் சாக்கடை அடைப்பை ரோட்டில் செல்லாதவாறு சீர் செய்ய வேண்டும், மேலும் ,கேட்டு கடையிலிருந்து பஸ் நிலையம் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், போக்குவரத்து, இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.எனது வார்டில், பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும்.சாத்தியார் ஓடை நீங்களாக உள்ள இடத்தினை, பேருராட்சி பூங்கா அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்திப் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், திமுக பொதுக்குழு உறுப்பினர் தனராஜ், ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், முன்னாள் தலைவர் ரகுபதி, இடையபட்டி நடராசன், மற்றும் நகரச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலக்கு கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!