சரித்திர பட்டியல் குற்றவாளியை கைது செய்யும்பொழுது தன்னைத்தானே பிளேடால் அறுத்துக் கொண்ட கைதி.

மதுரை மாநகர் திடீர்நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலவாசல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நாகராஜ் என்ற அஜித் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் மேலும் இவரை குற்ற வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் கைது செய்ய முற்படும்போது அவர் தன்னைத் தானே பிளேடால் தனது கைகளில் வெட்டி ரத்த காயத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன்மூலம் போலீசார் கைது செய்வதில் இருந்து தப்பித்து வந்தார் இந்நிலையில் 28 3 2022 தேதி இரவு பெரியார் பஸ் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த அவனியாபுரம் MMC காலனியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடமிருந்து கைபேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பிடுங்கிக்கொண்டு மேற்படி விக்னேஷ் என்பவரை அடித்து உதைத்து காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார்கள். மேற்படி வழக்கு சம்பந்தமாக மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் தெற்கு தங்கத்துரை ஆலோசனைப்படி திடீர்நகர் சரக காவல் உதவி ஆணையர் ரவீந்திர பிரசாத் தலைமையில் தீவிர குற்றப்பிரிவு தடுப்பு சார்பு ஆய்வாளர் மணிக்குமார் மற்றும் தனிப்படையினர் நீண்ட நாட்களாக காவல்துறை கைது செய்வதில் இருந்து தப்பி வந்த மேலவாசல் நாகராஜ் என்ற அஜித் மற்றும் அவனது நண்பர்கள் நான்கு பேர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர் மேற்படி நாகராஜ் சென்ற அஜித் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!