விலங்குகளிடம் பரிவு காட்டும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்.

மதுரை மாவட்டம், பாலமேடு சேர்ந்த முன்னாள் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் கு.தங்கம்.இவர் ,தற்போது பாலமேட்டிற்கு மேற்கே அமைந்துள்ள சாத்தியார் அணை பகுதியில் ,சுற்றிதிரியும் குரங்குகளுக்கு வாழைப்பழம் உணவாக கொடுத்து வருகிறரர்.இவரை பார்த்ததும், குரங்குகள் துள்ளி குதித்து ஓடிவந்து வாழைப்பழ உணவை பெற்று செல்கிறது. இவர், கடந்த கொரனாகாலத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த சேவையை செய்துவருகிறார். இவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்ராமமேஸ்வரம் முதல் மதுரை வரையிலான அரசு பஸ்சில் டிரைவாக பணிபுரிந்தபோது ,வரும் வழியில் சூட்கேஸ் கிழே கிடந்ததை எடுத்து மதுரைதல்லாகுலம் காவல்நிலையத்தில் ஓப்படைத்தார். அந்த சூட்கேஸ் சில்பல லட்சம் மதிப்பிளான தங்க நகை இருந்ததை உரியவரிடம் (சென்னை)தல்லாகுளம் காவல்நிலையத்தின் ஓப்படைத்தனர். இதனால் அரசு போக்குவரகத்து கழக டிரைவர் தங்கத்தை பாராட்டினர்.என்பது குறிப்பிடதக்கவை.டிரைவர் ,தங்கம் 1995ம் வருடம் ௹.20 லட்சம் மதிப்பிளான பொருள்களை ஒப்படைத்தற்காக அபாஷ்குமார், பாராட்டினார் .மேலும், போக்குவரத்து துறை நிர்வாக இயககுனர் சந்திப் சச்சேனாவும், இவரை, பராட்டியுள்ளனர்.இவருடைய மனித நேயத்தை கிராம மக்களும் பாராட்டுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!