அங்கக வேளாண்மை – வேளாண் மாணவிகள் நடத்திய பொதுகூட்டம்.

மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும்மாணவிகள் அஸ்வினி பிரியதர்ஷனி, ஆவணி, பவதாரணி, பூமிகா, பிளஸிஸ் கிஃப்டா, சின்றல்லா ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒருபகுதியாக தேவசேரி ஊராட்சியின் பொது சாவடியில் “அங்கக வேளாண்மை-இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி” என்னும் தலைப்பில் தேவசேரி ஊராட்சி மன்றத் தலைவர்அழகுமணி என்ற சசி, கொய்யா விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன், திரவியம் ஆகியோரின் உதவியுடன், பொது கூட்டம் நடத்தினர்.அக்கூட்டத்தில், வேளாண் பிரச்னைகள் குறித்து , விவசாயிகளிடம் கலந்துரையாடி கேட்டறிந்தனர்.சமூக வரைபடம், சிக்கல் மரம், தரவரிசை வரைபடம் என ஊரக பங்கேற்பு மதிப்பீட்டின் கருவிகள் பலவற்றை அவ்வூர் மக்களை கொண்டு வீதிகளில் வரையச்செய்தனர். இச்செயல்பாட்டில், அவ்வூர் மக்களும் வேளாண் மாணவிகளுடன் ஆர்வத்தோடு இணைந்து செயலாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!