சோழவந்தான் பேரூராட்சியில் சொந்த செலவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த.வார்டு கவுன்சிலர் .

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட தொழிலதிபர் எம் வி எம்.மருது பாண்டியன் தனது சொந்தச் செலவின் மூலம் ஜேசிபி வாகனத்தை கொண்டு குப்பைகளை அகற்றி வருகிறார். அகற்றிய குப்பைகளை உடனடியாக டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் இரட்டை அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் விரைவாக சுகாதாரம் பேணி காக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் எட்டாவது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அஹ்ரகாரம் கோவிந்தம்மாள் தெரு ரயில்வே பீடர் ரோடு வட்டப் பிள்ளையார் கோவில் மெயின்ரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் பராமரிப்பின்றி இருந்த சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் சரி செய்து கொடுத்தார் வெற்றி பெற்றவுடன் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வார்டு பொது மக்களுக்கு தனது சொந்த செலவில் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து கொடுத்த தொழிலதிபர் எம்விஎம் மருதுபாண்டியன் அவர்களை வார்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!