மதுரையின் அட்சயபாத்திரம் 300 ஆவது நாள் விழா.

மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் சார்பில் சிவராத்திரி விழாவை முன்னிட்டும் மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பு ரோட்டோரத்தில் உள்ள வறியவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி 300 நாள் பூர்த்தி ஆனதை முன்னிட்டும் சிறப்பு நிகழ்ச்சி மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் எம் பாலகுரு தலைமை தாங்கினார் ஆடிட்டர் எஸ். எல்.சேது மாதவா; சமூக ஆர்வலர் இல. அமுதன் மதுரை தல்லாகுளம் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனை டீன் டாக்டர் ரத்னவேல் பங்கேற்று வெளிநோயாளிகள் பகுதியில் 500 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு செய்திருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!