மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம.

மதுரை.உலகனேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரைமாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் உள்ளடங்கிய கல்வி திட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மருத்துவதுறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அலுவலகம் ஆர் .பி . எஸ். கே. ஆகிய துறைகள் இணைந்து 0.முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனிஸ்சேகர் தலைமையேற்று தொடங்கி வைத்தார் நமது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன் மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நாராயணணன் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் குருநாதன் உதவி திட்ட அலுவலர் கார்மேகம் வட்டார கல்வி அலுவலர் எஸ்தர் இந்திராணி மதுரை கிழக்கு மேற்பார்வையாளர் ஜான்சி பள்ளி தலைமையாசிரியை சசித்ரா.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்குமரன் ஆசிரியர் பயிற்றுனர்கள் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர் இம்மருத்துவ முகாமில் சுமார் 150 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கலந்து கொள்கின்றனர் மேலும் 15 வட்டார வள மையங்களில் மாற்றுத்திறன் மாணவர்கள் 1 முதல் 8 வரை இடைநிலை கல்வியில் 890 மாணவர்கள் பயில்கின்றனர் மாணவர்களுக்கு உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கும் தேசிய அடையாள அட்டை மற்றும் யூ டி ஐ டி தனித்துவ அடையாளஅட்டை பெற்றிருந்தாலும். முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட உள்ளது இம்மருத்துவ முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முகாம் சிறப்பு ஆலோசனைகளும் 01.03.2022ம் தேதியிலிருந்து19 .03.2022 வரை தொடர்ந்து நடைபெறுகிறது இம்மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் கட்டாயமாக மத்திய அரசின் மூலமாக வழங்கப்படும் தனித்துவ அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும் எனவே இதுவரை தனித்துவ அடையாள அட்டை பெறாதவர்கள் இன்று முதல் 19 03. 22ஆம் தேதி நடைபெறும் முகாமில் நேரில் வந்து பதிவினை மேற்கொள்ளலாம்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!