உக்ரேன் நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் பேட்டி.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து 28 -ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்வதற்கான ஆலோசனைகா கூட்டம் மதுரை மேற்கு ஒன்றியம், சமயநல்லூரில் நடைபெற்றது.இதில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:அவர் கூறும்போது:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது பலி வாங்கும் நடவடிக்கை இது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும்கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.உக்ரைனில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், கல்விக்காகவும் வேலை நிமித்தமாகவும் சென்ற அங்குள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும். இதனால், அறுவடை செய்யாமல் வயல்வெளிகளில் உள்ள அனைத்து நெல் பாதுகாக்கப்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.பயோமெட்ரிக் முறையால், ரேஷன் பொருட்கள் வழங்குவது தடைபடுவதை தாமதப் படுத்ததாமல், நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு சீராக வழங்க வேண்டும்.என்று கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!