வைகை- கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்:

வைகை கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. வைகை கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டம், நரிக்குடி எஸ்.நாங்கூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் பசீர் அகமது தலைமை வகித்தார். செயலாளர் உலக் குடி உறங்காபுலி முன்னிலை வகித்தார்.முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துக் கருப்பன் வரவேற்றார். கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மிகவும் பின் தங்கிய நரிக்குடி பகுதிக்கு விவசாயிகள் நலனுக்காக இந்த ஆண்டு கிருதுமால் நதிக்கு தண்ணீர் கொண்டுவர முயற்சி செய்த தமிழக முதல்வருக்கும் உறுதுணையாக இருந்த தொழில்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தூரிதமாக செயல்படுத்தக்கோரியும் முல்லைப்பெரியார் அணை-வைகை கிருதுமால் நதிநீர் பங்கீட்டை முறைப்படி நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் கிருதுமால் நதியில் காணப்படும் கருவேல மரங்கள், முட்புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறை வேற்றப்படது. கூட்டத்தில் , கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் ராஜாங்கம், நரிக்குடி ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன், மேலராங்கியம் மருதுபாண்டியன் கருப்பணத்தேவர், அல்லிநகரம் சூரப்பிரகாஷ், கருவக்குடி கருப்பணன், கவுன்சிலர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!