நெடுங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள் ஏற்றும் பணி துவக்கம்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, நெடுங்குளம் கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ,அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்தது. திருவேடகம், தச்சம்பத்து நெடுங்குளம், சோழவந்தான், ரிஷபம், ராயபுரம், திருமால் நத்தம், திருவாலவாய் நல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளைவித்த நெல் அறுவடை செய்து கொண்டுவரப்பட்டது. கடந்த சில நாட்களாக ,மதுரை மாவட்டத்திலுள்ள சேமிப்பு கிடங்கில் இறக்க இடமில்லாததால், தேங்கிய சூழ்நிலையில் இருந்தது .இது சம்பந்தமாக விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தனர்.அதனை ஏற்ற மாவட்ட நிர்வாகம், இன்று முதல் விரைவாக கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ,இன்று கனரக வாகனங்களில் ஏற்றும் பணி தொடங்கியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, நாட்களை நீட்டித்து இப்பகுதியில் அனைத்து விவசாய நிலங்களில் விளைந்த நெல் முற்றிலுமாக அறுவடை செய்யும் வரை கொள்முதல் நிலையம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!