வைகை ஆற்றில் கலக்கும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீர் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்.

மதுரை ஆழ்வார்புரம் வைகையாற்றுப் பகுதியில் ராட்சதக் குழாய் இணைப்பு உடைந்து கழிவுநீர் மொத்தமாக வெளியேறி வருகிறது. அது வைகையாற்றில் கலந்து ஆற்றை அசுத்தமாக்கி துர்நாற்றம் வீசி வருகிறது. நாம் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்தும் இந்தப் பகுதி எனது கண்ட்ரோல் இல்லை, எனது வார்டில் இல்லை என சப்பைக்கட்டு கட்டி சமாளித்து விட்டனர். தற்போது வரையிலும் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது அதனை மதுரை மாநகராட்சி கண்டுகொள்வதாக இல்லை. வைகை ஆற்றில் கழிவு நீரை கலப்பதை தடுக்க மதுரை மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா???? எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!