திமுகவின் வெற்றி நிரந்தரமானது இல்லை – ராஜன்செல்லப்பா பேட்டி.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன்செல்லப்பா….தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டிருப்பதை சட்டப்படி எதிர்கொள்வோம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றியும் தோல்வியும் சகஜம்தான், தற்போது தான் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் புது உத்வேகத்துடன் செயல்படுவோம்.திமுகவும் பல உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், என பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது.நடந்து முடிந்த தேர்தலில் திமுக கள்ள ஓட்டு போடுவதற்காக அதிகாரபலம் பணத்தோடு அதிகாரிகளையும் பயன்படுத்தியுள்ளது இந்த வெற்றி திமுகவிற்கு நிரந்தரமானது இல்லை அப்போது தெரிவித்தார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!