மதுரை அலங்காநல்லூர் அருகே இளம்பெண் வெட்டி படுகொலை.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் ஏடி காலனியை சேர்ந்தவர் வேங்கையன் (36). இவரது மனைவி கண்ணம்மாள் (29). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மனைவி கண்ணம்மாள் அழகர்கோவில் அருகே சுந்தராஜன்பட்டியில் உள்ளதன் தாய் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். இதனால், சென்னைக்கு சென்ற வேங்கையன் அங்குள்ள தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வந்த வேங்கையன் தனது மனைவி வீட்டில் சமரசம் பேசி சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, வேங்கையன் சொந்த ஊரான குறவன்குளத்தில் வீடு கட்டி சேர்ந்து வாழலாம் என முடிவு செய்து குடும்பத்துடன் குறவன்குளத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை இவர்களது வீட்டின் அருகே உள்ள கருவை மர காட்டுபகுதியின் சாலையோரத்தில் கண்ணம்மாள் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!