மதுரை அப்போலோ மருத்துவமனையில் முதன் முறையாக மூளை அனீரிசத்தினால் பாதிக்கப்பட்ட நுண்துளை அறுவை சிகிச்சை.

மதுரையை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோது மதிய உணவு இடைவேளையில் கழிவறைக்கு சென்ற அந்த சிறுவன் திடீரென மயங்கி கீழே விழுந்தான். பின்னர் சுயநினைவு திரும்பிய அவனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிறுவனுக்கு மூளையில் ஏதேனும் இரத்தக் கட்டிகள் இருக்கிறதா என்று கண்டறிய கதிரியக்க இமேஜிங் செய்யப்பட்டது. இரத்த கட்டிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் அவர் உயர் சிகிச்சைக்காக அப்போலோ சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மூளையின் உள்ளே உள்ள ஒரு பெரிய இரத்த நாளத்தில் உள்ள ஒரு சிதைந்த மூளை அனீரிசத்தை வெளிப்படுத்தியது. அவரது உடல்நிலை குறித்து பெற்றோர்கள் விளக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டது. மேலும் அவருக்கு நுண்துளை கிளிப்பிங் (Microsurgical Keyhole Clipping) எனும் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுவன் கோவிட் பாசிட்டிவ் என்பதால், அவர் கோவிட் பராமரிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூளை அனீரிசம் மற்றும் கோவிட் ஆகியவற்றிற்கு சேர்த்து சிகிச்சை பெற்றார். 5 நாட்களில் படிப்படியாக குணமடைந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.டாக்டர்.D.ஷியாம் (நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்), .S.N.கார்த்திக் (நரம்பியல் நிபுணர்), .B.நிஷா (நரம்பியல் மயக்க நிபுணர்), கெவின் ஜோசப் (நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்), G..பத்மபிரகாஷ் (தீவிர சிகிச்சை பிரிவு), முருகன் ஜெயராமன் (குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர்), நுரையீரல் நிபுணர்கள், கதிரியக்க வல்லுநர்கள் மற்றும் அவசர சிகிச்சை மருத்துவர்கள் ஆகியோர் சேர்ந்த மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக இந்த சிகிச்சையை செய்து முடித்தனர்.”இந்த அறுவை சிகிச்சையானது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான மற்றும் நீண்ட கால தீர்வை வழங்குகிறது. ஆரம்பநிலையிலேயே கண்டறிதல், விரைவான சிகிச்சை மற்றும் தரமான அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவை நோயாளியை விரைவில் குணமடைய ஏதுவாக இருக்கும். மூளை பக்கவாதம் ஒரு உயிருக்கு ஆபத்தான நோயாகும் மற்றும் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையை அணுகுவது மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவும். வாழ்நாள் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் ஆஞ்சியோகிராஃபிக் ஃபாலோ-அப்பை நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்று அப்போலோ பிரிவின் மருத்துவமனைகள் பிரிவின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் ரோகினி ஸ்ரீதர் கூறினார்.மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் போது மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் .கே.மணிகண்டன் உடனிருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!