மதுரையில் கடனை அடைக்க வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் 5 மணி நேரத்தில் கைது

மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்க நகர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (வயது 23) என்பவர் சக்திவேலம்மாள் நகர் பகுதியில் உள்ள திருவள்ளூர் மன்றம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பிரியதர்ஷினி கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.இதனையடுத்து சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல் ஆய்வாளர் பூமிநாதன் உத்தரவின்பேரில் எஸ் எஸ் காலனி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மணிக்குமார் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி தொகுப்புகளை ஆய்வு செய்ய தொடங்கிய போலீசார் தப்பி ஓடிய நபர் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்ததில்,வழிப்பறியில் ஈடுபட்ட நபர் பைக்காரா பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பதும் குடும்ப வறுமையின் காரணமாக கடன் பெற்றிருந்த நிலையில் அதனை திருப்பி செலுத்தவே வேறு வழி தெரியாமல் வழிப்பறியில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டார். இதற்கு முன் நேற்று பைக்காரா பகுதியில் மற்றொரு பெண்ணிடம் ஸ்கூட்டியில் சென்று செயின் பறிக்க முயற்சி செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.இதனை தொடர்ந்து தொடர்ந்து வாலிபரை காவல் நிலையத்தில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையின் காரணமாக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை ஐந்து மணி நேரத்தில் போலீசார் கைது செய்தது பொதுமக்கள் பாராட்டைப் பெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!