உணவுத் துறை அதிகாரி என்ற பேரில் உணவக உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

 மதுரையை சேர்ந்த பெருமாள் என்பவர் தமிழ் நேசம் நுகர்வோர் சங்கம் என்று நடத்தி வந்துள்ளார். இவர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் முன்னே உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பதாக வந்தத் தகவலின் அடிப்படையில் தான் வந்துள்ளதாகவும், பெருமாள் தன்னை உணவு அதிகாரி என்று கூறிக்கொண்டு அங்கு உள்ள உணவகங்களின் உரிமையாளர்களிம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதற்கு மாதாமாதம் பணம் கொடுக்குமாறு மிரட்டி வந்துள்ளார்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு டீ கடை உரிமையாளரிடம் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பதாக தனக்கு ஆதாரத்துடன் தகவல் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் ரெய்டுக்கு வந்துள்ளதாகவும் மாதம் 5000 வழங்கினால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவேன் என்று சொல்லி மிரட்டியுள்ளார். மேலும் பணம் தர மறுக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிப்பேன் என்று மிரட்டி ரூபாய் ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார் இதுகுறித்து வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்தநிலையில் திருமங்கலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்தார் அதில் அடிப்படையில் காவல் துறையினர் வீடியோ ஆதாரம் கொண்டு ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெருமாளை ஆஸ்டின்பட்டி போலீசார் தேடி வருகின்றனர் …

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!