மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் இருந்தது இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் நமது சத்தியப்பாதை இணையதள செய்தி தளத்தில் இது குறித்து நேற்று செய்தியாக வெளியிட்டு இருந்தோம் உடனடியாக மாநகராட்சி மின்வாரிய தெரு விளக்கு பராமரிப்பு அதிகாரி தொலைபேசி வாயிலாக நமது மதுரை மாவட்ட செய்தியாளர் தொடர்பு கொண்டு இதுகுறித்து உடனடியாக இன்று இரவே நடவடிக்கை நேரடியாக எடுப்பதாக உறுதி அளித்தார் அதன்படி சம்பவ இடத்திற்கு நேரடியாக நேற்று இரவு அப்பகுதியில் ஆய்வு செய்தார் அப்பொழுது எந்த தெரு விளக்கு எரியவில்லை இதைக் கண்டு அவர் அதிர்ந்து போனார் உடனடியாக அனைத்து மெயின் பாக்ஸ்கள் சோதித்தபோது ஒரு மெயின் பாக்சில் வயர்களை அணில் கடித்தது என என தகவல் தெரிவித்தார் அனைத்து தெருக்களும் எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தார் மீண்டும் பணி முடித்து 9 மணி அளவில் அனைத்து தெருக்களிலும் தற்போது எரிகிறது என சத்திய பாதை இணையதளம் செய்தியாளரிடம் தொலைபேசி வாயிலாக தகவலை தெரிவித்தனர் செய்தி வெளியிட்டு ஒரே நாளில் தீர்வு கிடைக்க உறுதுணையாக இருந்த சத்தியப்பாதை இணையதள செய்தி தளத்திற்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களும் நன்றியும் தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.