போக்குவரத்து இடையூறாக உள்ள வாகனங்களை, போலீஸார் அகற்ற கோரிக்கை.

மதுரை நாராயணபுரம் மேற்கு மெயின் சாலை அபிராமி குறுக்குத் தெருவில் உள்ளஇரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில், போக்குவரத்து இடையூறாக ரோட்டின் குறுக்கே பழுதுபார்க்கும் இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதால், பொது மக்கள் அபிராமி நகருக்கு செல்ல மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் இப்பகுதியில்குடியிருப்போரும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாராயணபும் மேற்கு மெயின் சாலைரயிலுள்ளஇருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையும், அதனை ஒட்டி சந்தில் உள்ள ஒர்க் ஷாப்பினரும்அபிராமி நகருக்கும், பரமசாமிநகர் 2-வது தெருவுக்கும் பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் மற்றும் காரிலும் செல்ல முடியாதபடிவாகனத் சாலையின் குறுக்கே பல இரண்டு சக்கர வாகனத்தை நிறத்துவதாலும், மேலும் ,பல மாதங்களாக இருசக்கர வாகனங்கள் அப்புற படுத்தாமல் குறுகிய சாலையில் நிறுத்தியுள்ளதாலும், போக்குவரத்துக்குமிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நாராயணபுரத்திலிருந்து அபிராமி நகரருக்கு செல்வோரும், பரமசாமி நகர் இரண்டாவது தெருவில் குடியிருப்போரும், பொதுமக்களும் இந்த இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையை தாண்டி இந்த மிக குறுகிய பாதையின் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதில், போக்குவரத்துக்கு இடையூறாக பழுது பார்க்கும் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி பழுதுபார்ப்பதால் , கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சொல்ல முடியாமல் சிரமமும், பக்கத்து தெருவழியாக சுற்றியும் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.ஆகவே ,இது குறித்து தல்லாகுளம் காவல்நிலைய உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!