மதுரையில் குடித்துவிட்டு தகராறில் ஈடுப்பட்ட வாலிபரை பெற்றோர்களே அடித்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததால் – பரபரப்பு.

மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையோரம் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொடூரமாக அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி பல அடி தூரம்இழுத்து வந்து ஆற்றின் கரையோரம் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியது.ஆற்றின் கரையோரம் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த உடலைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக கரிமேடு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும், தடயவியல் நிபுனர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை முடுக்கி விட்டனர்.விசாரணையில் மதுரை ஆரப்பாளையம் மறவர் தெருவை சேர்ந்த முருகேசன் – வேனி தம்பதியின் மகன் மணிமாறன் என்பதும், அவர் தினமும் குடித்து விட்டு தகராறில் ஈடுப்பட்டு வந்ததுள்ளதும், நேற்று நள்ளிரவு குடித்து விட்டு தகராறு செய்தததால் ஆத்திரத்தில் கட்டையை எடுத்து அடித்ததில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தும், சாக்கு மூட்டையில் கட்டி சைக்கிளில் எடுத்து வந்து வைகை ஆற்றங்கரையோரம் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு சென்றதும் தெரிய வந்தது.இதையடுத்து பெற்றோர்கள் இருவரையும் கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!