தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது .

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடக்கிறது என்றும் இதில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படும் என்றும் நேற்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி ஊழியர்களாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஏற்கனவே அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களப்பணியில் இன்னும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் ஈடுபட உள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!