73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு இலவசமாகவும் காவலர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையிலும் முடி திருத்தம் செய்யும் சலூன் கடை உரிமையாளர்.

மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சந்துரு, செந்தில் இவர்கள் வில்லாபுரம் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார்கள்.இவர் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய சிறப்பு தினங்களில் அவரது அழகு நிலையத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் 73வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை கௌரவிக்கும் விதமாக இன்று ஒரு நாள் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு இலவசமாகவும் காவல்துறையினருக்கு 50% சலுகை விலையிலும் முடி திருத்தம் மற்றும் முக சவரம் செய்து வருகிறார்.இந்த சிறப்பு சலுகையானது ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது மேலும் இப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!