ரயில்வே காவல்துறை சார்பாக விழிப்புணர்வு

இன்று மதுரை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இதனைத் தொடர்ந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே காவல் துறை சார்பாக பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

இதுகுறித்து மதுரை ரயில்வே காவல் ஆய்வாளர்  இயேசு ராஜசேகர் அவர்கள் பேசும்பொழுது ஓடும் ரயிலில் ஏற இறங்க கூடாது அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்கும் உணவு பொருட்களையும் குளிர்பானங்களை வாங்கி பருகக்கூடாது மடியில் உட்கார்ந்து பயணம் செய்யக்கூடாது செல்போன் பேசியபடியே தண்டவாளத்தை கடக்க கூடாது இரவு நேரங்களில் தூங்கும்போது ஜன்னல்களை சாற்றி பயணம் செய்யவேண்டும் அவசரகால தொலைபேசி எண் எனது 1512 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ரயில்வே காவல்துறை உதவியை நாடலாம் என அவர் தெரிவித்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!