பல கோடி மோசடி செய்த கும்பலுக்கு காவல்துறை உடந்தையாக இருப்பதாக கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மோசடி கும்பல் ஒன்று பல மாவட்டங்களில் போலியாக நிறுவனம் நடத்தி பொதுமக்களிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை மோசடி செய்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் மீது திருச்சி மாவட்ட போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி கும்பல் மீது பல மாவட்டங்களில் பொதுமக்களால் புகார் அளிக்கப்பட்டது. திருச்சியில், அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மதுரையில் ரேணுகாதேவி அளித்த புகாரின் பேரில் 2021 வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ,மதுரை குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நாகமலைபுதுக்கோட்டை ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதந்திரதேவி குற்றவாளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக தகவல் கொடுத்து அவர்களை தப்ப வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தனபால் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி ,மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்யவும், அவர்களுக்கு உதவிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!